search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காற்றாலை மின்சாரம்"

    2030-ம் ஆண்டுக்குள், நமது மின்சார தேவையில் 40 சதவீதத்தை சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரம் மூலம் பூர்த்திசெய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். #India #NonFossilFuel #Modi
    புதுடெல்லி:

    டெல்லி விஞ்ஞான பவனில், சர்வதேச சூரிய சக்தி கூட்டணி என்ற அமைப்பின் கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அதில் அவர் பேசியதாவது:-

    கடந்த 200 ஆண்டுகளாக, பூமிக்கு அடியில் கிடைக்கும் நிலக்கரி போன்ற பொருட்களைத்தான் மின்சார தேவைக்காக பயன்படுத்தி வந்தோம். ஆனால், பாதுகாப்பான எதிர்காலத்துக்காக, பூமிக்கு மேலே கிடைக்கும் சூரிய சக்தி, காற்றாலை போன்ற வளங்களை நாம் பயன்படுத்த வேண்டும்.

    2030-ம் ஆண்டுக்குள், நமது மின்சார தேவையில் 40 சதவீதத்தை சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரம் மூலம் பூர்த்திசெய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #India #NonFossilFuel #Modi 
    போடி அருகே காற்றாலை மின்சாரத்துக்காக குளம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் தண்ணீர் தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகே உள்ள அம்பரப்பர் மலை அடிவாரத்தில் பெரியாறு குளம் உள்ளது. தென் மேற்கு பருவமழை காலத்தில் இந்த குளம் நிரம்பி ஏராளமான விவசாய நிலங்கள் பாசன வசதிக்கு பயன்படுத்தப்படும். ஆனால் தற்போது இந்த குளப்பகுதி ஆக்கிரமிப்பில் உள்ளது.

    மஞ்சளாறு வடிநிலக் கோட்டத்தின் கீழ் நீர் பாசன அமைப்புகள் புணரமைக்கும் திட்டத்தின் கீழ் கண்மாய் புணரமைக்கும் பணி நடந்து வந்தது. கடந்த 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1½ வருடத்தில் முடிக்க வேண்டிய பணி கிடப்பில் போடப்பட்டது.

    காற்றாலைக்காக குளம் ஆக்கிரமிக்கப்பட்டு அப்பகுதி வறண்டு கிடப்பதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். பல பகுதிகளில் மழை தீவிரமடைந்து விவசாய பணிகள் நடந்து வரும் நிலையில் இந்த குளத்தை நம்பி பாசனம் செய்யும் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்திருப்பதால் அனல் மின்நிலையங்களில் உற்பத்தி குறைக்கப்பட்டு உள்ளது.
    சென்னை:

    இந்திய அளவில் காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. தமிழகத்தில் நெல்லை, கன்னியாகுமரி, பல்லடம், உடுமலை, தேனி உள்ளிட்ட இடங்களில் 8,152 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 11,800 காற்றாலைகள் செயல்பட்டு வருகின்றன. காற்றாலை மின் உற்பத்தி ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை இருக்கும்.

    ஆனால் இந்த ஆண்டு காற்றாலை மின் உற்பத்தி கடந்த மாதம் 15-ந் தேதியே தொடங்கிவிட்டது. தற்போது காற்றாலைகள் மூலம் படிப்படியாக மின்சார உற்பத்தி அதிகரித்து வருகிறது.

    இதுகுறித்து எரிசக்தி துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    காற்றலை மின்உற்பத்தி அதிகரித்து இருப்பதால் தமிழகத்தில் அனைத்து பகுதிகளுக்கும் தடையற்ற மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. அனல் மின் உற்பத்தியை சற்று குறைத்துக்கொண்டு, காற்றாலை மின்சாரம் முழுஅளவில் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல், சூரியசக்தி மூலம் மின் உற்பத்தியும் சராசரியாக ஒரு நாளைக்கு 1,500 மெகாவாட் வரை நடந்துவருகிறது.

    காற்றாலைகளின் அதிகமான மின் உற்பத்தி காரணமாக தமிழகத்தின் மின்தேவை முழுமையாக பூர்த்தியாகியுள்ளது. தேவைக்கு அதிகமாக உள்ள உபரி மின்சாரத்தை வெளிமாநிலங்களுக்கு விற்பதற்கும் மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளது.

    இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

    இதுகுறித்து அகில இந்திய காற்றாலை சங்க தலைவர் கஸ்தூரி ரெங்கையன் கூறியதாவது:-

    தமிழகத்தில் கடந்த ஆண்டு காற்று சீசன் காலங்களில் மொத்த மின்சார உற்பத்தியில் 12 சதவீதம் (1,300 கோடி யூனிட்) காற்றாலை மூலம் வினியோகம் செய்யப்பட்டது. இந்த ஆண்டில் கடந்த ஒரு வாரமாக காற்றாலை மின்சார உற்பத்தி அதிகரித்து வருகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் காற்றாலை மூலம் 6.5 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

    கடந்த வாரம் ஒரே நாளில் 8.5 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. சராசரியாக ஒரு நாளைக்கு காற்றாலை மூலம் 2,500 முதல் 3 ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டைவிட கூடுதலாக காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    ×